Saturday 4th of May 2024 02:47:36 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிம் ஜாங் உன் பொதுவெளிக்கு  வருவதைக் குறைத்துள்ளது ஏன்?!

கிம் ஜாங் உன் பொதுவெளிக்கு வருவதைக் குறைத்துள்ளது ஏன்?!


வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த இரண்டு மாதங்களில் வழக்கத்திற்கு மாறாக குறைந்த தடவைகளே பொது நிகழ்வுகளில் தோன்றியுள்ளாா்.

கிம் ஏப்ரல் மாதம் முதல் இதுவரை நான்கு தடவைகள் மட்டுமே பொது வெளிக்கு வந்துள்ளாா்.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 27 தடவைகள் அவா் பொது வெளிக்கு வந்துள்ளாா்.

2011 -இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிம் கடந்த 2017 இல் மிகக் குறைந்த அளவில் பொது வெளிக்கு வந்த ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டில் 21 தடவைகள் மட்டுமே அவா் பொது நிகழ்வுகளில் பங்கேற்றாா்.

வட கொரியாவின் 25.5 மில்லியன் மக்கள் மீது முழுமையான அதிகாரம் கொண்ட ஒரு தலைவராகவும், வளர்ந்து வரும் அணு ஆயுத திட்டங்களால் அதிகம் பேசப்படுபவருமான கிம், சா்வதேச சமூகத்தால் அதிகம் கண்காணிக்கப்படுபவராக உள்ளாா்.

எனினும் வட கொரியாவின் தகவல்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் கிம் குறித்த சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் கிட்டத்தட்ட இல்லை.

கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த முன்னெச்சரிக்கைகளால் கிம் பொது வெளிக்கு அதிகம் வராமல் இருக்கலாம் என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வட கொரியா பல பெரிய பொதுக் கூட்டங்களை ரத்துசெய்துள்ளது அல்லது குறைத்துவிட்டது.

கிம் பொது வெளியில் காணப்படாமை குறித்து கேட்டபோது, நிலைமையைக் கண்காணித்து வருவதாக தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியது. ஆனால் கிம் பெரும்பாலும் மக்கள் பார்வையில் இல்லை என அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வொன்சானில் உள்ள கடற்கரையில் அவருக்கு விருப்பமான ஒய்வு இல்லத்தில் இருந்தவாறு கிம் தனது கடமைகளைச் செய்யக்கூடும் என பெயரிடப்படாத தென் கொரிய அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி ஜோங்ஆங் இல்போ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் கோடிட்டுக் காட்டிய சில உள்நாட்டு பொருளாதார மற்றும் அரசியல் குறிக்கோள்களிலும் கிம் கவனம் செலுத்தக்கூடும் என்று அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் வட கொரியாவின் புலனாய்வு ஆய்வாளர் ரேச்சல் மினியோங் லீ கூறினார்.

கிம் இறுதியாக ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படங்களை மாநில ஊடகங்கள் கடைசியாகக் வெளியிட்டு 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில் அதன் பின் அவரைக் பொது வெளியில் காணவில்லை.

மே முதலாம் திகதி ஒரு உர ஆலையின் தொடக்க விழாவில் கிம் கலந்து கொண்டதாக வட கொரிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஏப்ரல் மாதம் முதல் அவா் பொது வெளிக்கு வராத நிலையில் அவரது உடல்நலம் மற்றும் இருப்பிடம் குறித்த செய்திகள் சா்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

கிம் பொது வெளிக்கு வராமல் நீண்ட காலங்கள் இருப்பது இதற்கு முன்னரும் பலதடவைகள் நடைபெற்றுள்ளது என்றாலும் அவா் பொது வெளிக்கு வராத சந்தா்ப்பங்கள் எல்லாமே பல ஊடகங்களுக்கு வித்திட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE